Tuesday, November 5, 2013

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் Metro rail test run will be starting tomorrow

சென்னை, நவ.5-

சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்டிரல்-பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் திட்டத்தில் முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக 11 ரெயில் நிலையங்களை கடந்து வரும் மெட்ரோ ரெயில், சைதாப்பேட்டை கூவம் ஆற்றிற்கு முன்பு, சுரங்கத்தில் இருந்து பறக்கும் பாதையாக மாறி பயணத்தை தொடங்குகிறது. அதன்பிறகு, சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரை 6 ரெயில் நிலையங்களை பறக்கும் பாதையிலேயே கடக்கிறது.

இதேபோல், 2-வது வழித்தடத்தில், சென்டிரல் முதல் அண்ணாநகர் டவர் வரை சுரங்கப்பாதை வழியாக 8 ரெயில் நிலையங்களை கடக்கும் மெட்ரோ ரெயில், திருமங்கலத்தில் இருந்து பறக்கும் பாதைக்கு வந்துவிடுகிறது. அதன்பிறகு, கோயம்பேடு வழியாக 8 ரெயில் நிலையங்களை கடந்து பறக்கும் பாதையிலேயே விமான நிலையத்தை சென்றடைகிறது.

இந்த வழித்தடத்தில் இயக்குவதற்காக பிரேசில் நாட்டிலிருந்து 4 பெட்டிகளுடன் கூடிய நவீன ரக ரெயில் வாங்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்காக 800 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை ஓட்டப்பாதையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ரெயிலின் சோதனை ஓட்டத்தை நாளை (புதன்கிழமை) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இதற்காக நேற்று இரவு தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி கோயம்பேட்டில் உள்ள பணிமனை மற்றும் முனையத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

குறிப்பாக ரெயிலில் தானியங்கி கதவுகள், என்ஜின், சக்கரம் போன்றவை செயல்படுவது குறித்து சோதனை செய்தார். மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள், வெளிநாட்டு ரெயில் நிறுவன பொறியாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து சோதனை ஓட்டத்தை தொடங்கிவைப்பதற்காக அமைக்கப்படும் தனி மேடையையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அனைத்தும் வெற்றிகரமாக இயங்கியதால் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் திருப்தி ஏற்பட்டது. நாளை முதல் தொடர்ந்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். அவை முடிந்தவுடன், 2014-ம் ஆண்டு மத்தியில் கோயம்பேடு - பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், கோயம்பேடு, சி.எம்.பி.டி., அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் வரை 7 ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் பயணிகள் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

...

shared via

Monday, November 4, 2013

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: ஜெயலலிதா இரங்கல் jayalalitha obituary admk members dead

அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம்: ஜெயலலிதா இரங்கல் jayalalitha obituary admk members dead

சென்னை, நவ. 4–

முதல் – அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி நகரம் அ.தி.மு.க. அவைத் தலைவர் அமாவாசை, காஞ்சீபுரம் மத்திய மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், பேரூராட்சி மன்ற 13–வது வார்டு உறுப்பினருமான சீனிவாசன், வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம், கதவாளம் ஊராட்சி செயலாளர் ஆர்.வில்லியம், திருப்பூர் மாநகர் மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியகுழு 7–வது வார்டு உறுப்பினர் பத்மாவதி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அமாவாசை, சீனிவாசன், வில்லியம், பத்மாவதி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

...

shared via

Sunday, November 3, 2013

தீபாவளிக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 4300 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு: ஜெயலலிதாவுக்கு பயணிகள் பாராட்டு jayalalitha arranged 4300 special buses for people return to chennai

தீபாவளிக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 4300 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு: ஜெயலலிதாவுக்கு பயணிகள் பாராட்டு jayalalitha arranged 4300 special buses for people return to chennai

சென்னை, நவ. 3–

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக தமிழக அரசு சார்பில் 8350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஏற்பாட்டில் சென்னையில் இருந்து 4500 சிறப்பு பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.

இதேபோல பல நகரங்களில் இருந்து சென்னைக்கு 4050 சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. இந்த சிறப்பு பஸ்கள் அனைத்தும் 29–ந்தேதி முதல் 1–ந்தேதி வரை 4 நாட்கள் இயக்கப்பட்டன.

பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 4300 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் 5–ந்தேதி வரை விடப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ்கள் மூலம் லட்சணக்கான மக்கள் பயணம் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், கும்பகோணம், பெங்களூர், ஓசூர், சிதம்பரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகை நேற்று இரவு முடிந்தாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் இன்று பயணம் செய்வார்கள்.

இன்று மாலையில் இருந்து சிறப்பு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகங்களும் விடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அந்தந்த மாவட்ட நகரங்களில் உள்ள முன்பதிவு மையங்கள், தகவல் மையங்களுக்கு சென்றால் அவர்களுக்கு இடவசதியை அதிகாரிகள் செய்து கொடுப்பார்கள்.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் நாளை செயல்படுவதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய நகரங்களில் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் நேரடி மேற்பார்வையில், மேலாளர்கள், துணை மேலாளர்கள் பயணிகளுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இதேபோல சென்னை கோயம்பேட்டில் இருந்தும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.

பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பஸ்சில் அமர்ந்து பயணம் செய்யும் வசதியாக சிறப்பு பஸ்கள் உதவியாக இருந்ததாகவும், இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட முடிந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் போக்குவரத்து வசதி ஏற்பாட்டை மனப்பூர்வமாக பாராட்டு கிறோம் என்று பயணிகள் தெரிவித்தனர்.

...

shared via

Friday, November 1, 2013

மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: ஜெயலலிதா தீபாவளி திருநாள் வாழ்த்து jayalalitha diwali festival wishes to people

மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: ஜெயலலிதா தீபாவளி திருநாள் வாழ்த்து jayalalitha diwali festival wishes to people

சென்னை, நவ. 1–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.

இந்த நன்னாளில் மக்கள், மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த தீப ஒளித் திருநாளில், மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

...

shared via

Popular Posts