Wednesday, October 23, 2013

ஜெயலலிதா முன்னிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்ரவால் பதவி ஏற்றார் High court chief judge Rajesh sworn

ஜெயலலிதா முன்னிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்ரவால் பதவி ஏற்றார் High court chief judge Rajesh sworn

சென்னை, அக். 24–

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய எம்.ஒய்.இக்பால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதைத் தொடர்ந்து நீதிபதி தர்மாராவ் சென்னை ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்.

பின்னர் உத்தரபிரதேச மாநிலம் அகலாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பணிமூப்பு பெற்றதை தொடர்ந்து ராஜேஷ்குமார் அக்ரவாலை தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவால் பதவி பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று காலை கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடந்தது.

அப்போது தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்த உத்தரவை ஆங்கிலத்தில் வாசித்தார். அதன் பிறகு தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு கவர்னர் ரோசய்யாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் கவர்னர் ரோசய்யாவும், தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவாலும் பதவி ஏற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டனர். இதன் பிறகு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

அதையடுத்து ஐகோர்ட்டு நீதிபதிகள், அரசு வக்கீல்கள் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவருக்கும் தேனீர் விருந்து வழங்கப்பட்டது.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts