Sunday, November 3, 2013

தீபாவளிக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 4300 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு: ஜெயலலிதாவுக்கு பயணிகள் பாராட்டு jayalalitha arranged 4300 special buses for people return to chennai

தீபாவளிக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 4300 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு: ஜெயலலிதாவுக்கு பயணிகள் பாராட்டு jayalalitha arranged 4300 special buses for people return to chennai

சென்னை, நவ. 3–

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக தமிழக அரசு சார்பில் 8350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

முதல்– அமைச்சர் ஜெயலலிதா ஏற்பாட்டில் சென்னையில் இருந்து 4500 சிறப்பு பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.

இதேபோல பல நகரங்களில் இருந்து சென்னைக்கு 4050 சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. இந்த சிறப்பு பஸ்கள் அனைத்தும் 29–ந்தேதி முதல் 1–ந்தேதி வரை 4 நாட்கள் இயக்கப்பட்டன.

பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 4300 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் 5–ந்தேதி வரை விடப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ்கள் மூலம் லட்சணக்கான மக்கள் பயணம் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், கும்பகோணம், பெங்களூர், ஓசூர், சிதம்பரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகை நேற்று இரவு முடிந்தாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் இன்று பயணம் செய்வார்கள்.

இன்று மாலையில் இருந்து சிறப்பு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகங்களும் விடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அந்தந்த மாவட்ட நகரங்களில் உள்ள முன்பதிவு மையங்கள், தகவல் மையங்களுக்கு சென்றால் அவர்களுக்கு இடவசதியை அதிகாரிகள் செய்து கொடுப்பார்கள்.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் நாளை செயல்படுவதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய நகரங்களில் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் நேரடி மேற்பார்வையில், மேலாளர்கள், துணை மேலாளர்கள் பயணிகளுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இதேபோல சென்னை கோயம்பேட்டில் இருந்தும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களுக்கும் சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.

பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பஸ்சில் அமர்ந்து பயணம் செய்யும் வசதியாக சிறப்பு பஸ்கள் உதவியாக இருந்ததாகவும், இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட முடிந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் போக்குவரத்து வசதி ஏற்பாட்டை மனப்பூர்வமாக பாராட்டு கிறோம் என்று பயணிகள் தெரிவித்தனர்.

...

shared via

No comments:

Post a Comment

Popular Posts