உயிர் உள்ளவரை அம்மாவுக்கு விசுவாசமாக இருப்போம்: ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா பேட்டி yercaud constituency admk candidate Saroja interview
ஆத்தூர், அக். 23–
ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மரணம் அடைந்த பெருமாள் மனைவி சரோஜா (55) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் ஆத்தூர் அருகே உள்ள புழுதிகுட்டை கிராமம் ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். இவரது தந்தை வரதப்ப கவுண்டர். இவர் அங்கன் வாடி பள்ளி ஆசிரியராக பணியாற்றிய போது, தபால் காரராக வேலைப்பார்த்த பெருமாளை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார்.
கடந்த 1980–ல் இருந்து அ.தி.மு.க. உறுப்பினராக உள்ளார். பாப்ப நாயக்கன் பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக கடந்த 1994–ம் ஆண்டு முதல் 1996–ம் ஆண்டு வரை இருந்தார்.
இவருக்கு ராஜேஷ் கண்ணா, சுரேஷ் கண்ணா, சதீஷ், கார்த்திக் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். இதில் ராஜேஷ் கண்ணா மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணை தலைவராக உள்ளார். மேலும் கருமந்துறை லேம்ப் கூட்டுறவு சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார்.
சுரேஷ்கண்ணா விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா, சதீஷ் தர்மபுரி மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக பணியாற்று வருகிறார். இவரது மனைவி நித்யா. கடைசி மகன் கார்த்தி என்ஜினீயரிங் படித்துள்ளார்.
இதுகுறித்து சரோஜா மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:–
எனது கணவர் இறந்த போது முதல்–அமைச்சர் நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உங்கள் குடும்பத்துக்கு நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறினார். அதன்படி தற்போது என்னை ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவித்து உள்ளார். உயிர்உள்ள வரைக்கும் அம்மாவுக்கு நாங்கள் விசுவாசமாக இருப்போம் என்றார்.
சரோஜாவின் கணவர் பெருமாள் ஏற்காடு தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முதன் முதலில் இவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
...
shared via
No comments:
Post a Comment