Wednesday, October 30, 2013

விலைவாசி ஏற்றத்துக்கு மத்திய அரசே காரணம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல் central government cause rate price jayalalitha infirm assembly

விலைவாசி ஏற்றத்துக்கு மத்திய அரசே காரணம்: சட்டசபையில் ஜெயலலிதா தகவல் central government cause rate price jayalalitha infirm assembly

சென்னை, அக். 30–

சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராமச்சந்திரன் விலைவாசி குறித்து பேசியதற்கு பதில் அளித்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள். ஆனால் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க மாநில அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிற மாநில அரசுகளைப் பற்றி நான் பேச வரவில்லை. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், மத்திய அரசினால் ஏற்பட்ட வெங்காய விலை ஏற்றத்தினை சமாளிக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய். சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 75 முதல் 80 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. பழமுதிர் நிலையங்கள் போன்ற நவீன மயமாக்கப்பட்ட கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 95 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

ஆனால் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தற்போது சென்னையில் 30 கடைகள் இயங்கி வருகின்றன. தரமான பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

ஆக, இந்த அரசைப் பொறுத்த வரையில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைப்பதற்கு தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிற மாநிலங்களில் பெரிய வெங்காயத்தின் விலை என்னவென்றால் பெங்களூரில் 58 ரூபாய், ஐதராபாத்தில் 60 ரூபாய், கேரளாவில் 70 ரூபாய், டெல்லியில் 65 ரூபாய், மும்பையில் 70 ரூபாய், கொல்கத்தாவில் 70 ரூபாய், பீகாரில் 80 ரூபாய், அசாமில் 78 ரூபாய்.

தமிழ்நாட்டிற்கு பெரிய வெங்காயம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக், லாசல்கான், அகமது நகர், பிம்பல்கான் மற்றும் ஷோலாப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன், ஹுப்ளி, தேவகரே மற்றும் பெங்களூரில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூல், ஆதோனி ஆகிய பகுதிகளிலிருந்து வரவழைக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலில் போராட்டம் நடைபெறுவதால், அங்கிருந்து வெங்காயம் கொண்டு வர இயலாத நிலை உள்ளது. கோயம்பேட்டிற்கு நாளொன்றிற்கு சுமாராக 70 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருந்தது.

24.10.2013 அன்று 55 லாரிகளும், 25.10.2013 மற்றும் 26.10.2013 ஆகிய தேதிகளில் 50 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை மற்ற மாநிலங்களில் உள்ள வெங்காயத்தின் விலை ஒத்ததாகவே உள்ளது.

நுகர்வோருக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக, சென்னை பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தற்போது நாளொன்றுக்கு 6 டன் பெரிய வெங்காயமும், 1 டன் சாம்பார் வெங்காயமும் விற்பனை செய்யப்படுகிறது. 26.10.2013 முதல் எனது உத்தரவின்படி, பெரிய வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் கொள்முதல் இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது.

காய்கறிகளின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, உடனடியாக கூடுதலாக 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளைத் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அம்மா உணவகம் பற்றி எல்லோருக்கும் தெரியும். சாதாரணமாக ஓட்டல்களில் இட்லி சாம்பார் சாப்பிடுவது என்றால் என்ன விலை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தயிர் சாதம் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இப்படி அதிகமான அம்மா உணவகங்களை எங்கெல்லாம் துவங்க முடியுமோ துவங்கி மக்களுடைய சுமையை குறைப்பதற்கு இந்த அரசு மேலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சாதாரணமாக ஒரு பாட்டில் மினரல் வாட்டரை வாங்கிக் குடிக்க வேண்டுமென்றால் 20 ரூபாய் ஆகும். 20 ரூபாய்க்கு குறைந்து வெளிச்சந்தையில் கிடைக்காது. ஆனால், போக்குவரத்துத்து துறை மூலமாக அதே தரமான குடிநீரை, மினரல் வாட்டரை 10 ரூபாய்க்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இப்படி மாநில அரசின் சக்திக்கு உட்பட்டு மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு என்னனென்ன நடவடிக்கைகளை, விலைவாசியை குறைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ எடுத்து வருகிறோம்.

அதே சமயத்தில், மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. நிதிநிலையைப் பற்றி மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிதிகளைப் பற்றி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே குறிப்பிட்டார்.

மத்திய அரசுக்கு ஒரு நம்பகத்தன்மை இருக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்டு, நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு, ஒவ்வொரு மாநிலத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று அதில் ஒரு திட்டம் போட்ட பிறகு அதை மாற்றக்கூடாது.

ஏனென்றால், வெவ்வேறு இனங்களில் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிதி உள்ளது. அப்போது அந்தத் திட்டத்தின்கீழ் என்னென்ன பணிகளை இங்கு மேற்கொள்ளலாம் என்று மாநில அரசும் திட்டம் தீட்டுகிறது. மத்திய அரசு குறிப்பிட்ட ஒரு திட்டத்தின்கீழ் இத்தனை கோடி ரூபாய் மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் என்று அவர்களுடைய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பின்னர் மாநில அரசு அதற்கேற்ப தனது திட்டங்களை வகுத்து செயல்பட ஆரம்பிக்கிறது.

ஒவ்வொரு திட்டத்தின் கீழும் சில பணிகளை மேற்கொண்டு செலவும் செய்து விடுகிறது. பல கோடி ரூபாய்களை எந்த நம்பிக்கையில் செலவு செய்கிறோம். பின்னர் மத்திய அரசு இந்தப் பணத்தை நமக்கு அளிக்கும், நமக்கு வரவேண்டிய நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் செலவு செய்கிறோம். ஆனால், அண்மையில், துரதிர்ஷ்டவசமாக, இதுவரை வரலாற்றில் இல்லாததாக, ஒரு முன்மாதிரி இல்லாத வகையில் மத்திய அரசு தன்னுடைய நம்பகத்தன்மையையே கெடுத்துக் கொண்டுள்ளது.

அதாவது, ஏற்கெனவே, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு திட்டத்தின் கீழ் இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவித்த பிறகு அதில் நாங்கள் அதை நம்பி செலவு செய்ய ஆரம்பித்த பிறகு, 20 சதவீதம் அளவு வரை வெட்டு செய்திருக்கிறார்கள். 20 சதவீதம் குறைத்து இருக்கிறார்கள். அப்படியானால், குறிப்பிட்டு மத்திய அரசிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்கெனவே மாநில அரசு பல பணிகளை துவங்கிவிட்டதே, பல கோடி ரூபாய்களை செலவு செய்து விட்டதே, அவையெல்லாம் எங்கிருந்து வரும், அந்தப் பணத்தை யார் மீண்டும் ஈடுசெய்வார்கள்.

ஆகவே, இப்படி பல பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டு அதே நேரத்தில் மத்திய அரசு எடுக்கின்ற தவறான நடவடிக்கைகள் காரணமாக, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து இந்த அரசு, தமிழக அரசு, தன்னால் இயன்ற அளவு மக்களின் துன்பங்களை குறைத்து, விலைவாசியை குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப்போது மாநில அரசுக்கு என்று இருக்கின்ற ஒரே வருவாய் வணிக வரிமூலமாக வருகின்ற வருவாய்தான். வேறு எந்த வருமானமும் கிடையாது. அதிலேயும் கை வைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

அதற்காகத்தான், இந்த நல்லெண்ண சேவை வரி மசோதாவை அவர்கள் கொண்டு வருகிறார்கள். அதற்காகத்தான் அதை கடுமையாக எதிர்த்திருக்கிறோம். சாதாரண எதிர்ப்பல்ல, ஒரு முறையல்ல, இரு முறையல்ல, 2011 முதல் இந்த மசோதாவை பற்றி அவர்கள் குறிப்பிடும் போதெல்லாம், கொண்டு வரவேண்டும் என்று சொல்லும் போதெல்லாம், மாநில அரசு, இந்த அரசு, எனது தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே வந்திருக்கிறது. அண்மையிலும், மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் நம்முடைய மாநிலத்தின் சார்பில் வணிக வரி அமைச்சர் அங்கே கலந்து கொண்டார். முழுவதுமாக எதிர்த்து இருக்கிறோம்.

அதாவது, ஒரு ஷரத்து, இரண்டு ஷரத்து என்றல்ல. ஒரு பிரிவு, இரண்டு பிரிவு என்றல்ல. ஒட்டுமொத்தமாக அந்த சட்டத்தையே எதிர்த்து இருக்கிறோம். அதையும் மீறி, அவர்கள் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், பாதிப்பு அதிக நாட்கள் வரை இருக்காது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், மத்தியிலே அரசு மாறும், ஆட்சி மாறும், எல்லாமே மாறும், அப்போது இந்தச் சட்டத்தையே தூக்கி எறிவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

...

shared via

Tuesday, October 29, 2013

TN govt to frame new large mineral mining policy soon: Jaya

Chennai, Oct 29: The Tamil Nadu Government would evolve a new policy governing large mineral quarries after the formation of a high-level committee, set up to go into alleged illegal mining, Chief Minister Jayalalithaa informed the state assembly today.

"I am determined that such natural resources of significance are not exploited (by mining them) beyond government allowed levels," she said intervening during debate on the supplementary estimates for 2013-14.

Noting that a country's economic growth depended on the proper use of natural resources like minerals, water and energy, she said she had constituted the committee under Revenue Secretary Gagandeep Singh Bedi to study illegal mining of beach minerals like garnet, ilmenite and rutile in Tuticorin and later extended it to cover Tirunelveli, Kanyakumari, Tiruchirappalli and Madurai districts.

Jayalalithaa's response came when DMDK member Alagaapuram R Mohan Raj wanted to know what action the government had taken against illegal mining of the beach minerals. The Chief Minister said the committee had submitted its report in respect of Tuticorin, while its findings about other districts were awaited, adding presently enquiry was on in Tirunelveli district.

Jayalalithaa said that based on the Bedi Committee report, her government would decide on a large mineral quarries policy. The state government had in August last set up the committee, following a report submitted by former Tuticorin District Collector Ashish Kumar that 2.25 lakh tonnes of mineral sand had been illegally mined.

PTI

Monday, October 28, 2013

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் மகப்பேறு வார்டு தொடங்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு Women maternity ward will begin in Vedaranyam government hospital Jayalalitha announced

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்கள் மகப்பேறு வார்டு தொடங்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு Women maternity ward will begin in Vedaranyam government hospital Jayalalitha announced

சென்னை, அக்.28–

சட்டசபையில் வேதாரண்யம் எம்.எல்.ஏ. காமராஜ், வேதாரண்யம் அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவ காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி கூறும்போது, தற்போது 7 மருத்துவர்கள் அங்கு பணிபுரிவதாகவும் மீதி பணியிடங்களை பதவி உயர்வு, பணி அமர்வு மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு கூறியதாவது:–

அந்த மருத்துவமனையில் பெண்கள் மகப்பேறு பிரிவுக்கு போதிய வசதி இல்லை, தனி பிரிவு தொடங்க வேண்டும் என்று காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பெண்கள் தனி பிரிவு தொடங்க ஆவன செய்யப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

...

shared via

எந்த காலகட்டத்திலும் விழுப்புரம் மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை: சட்டசபையில் ஜெயலலிதா பதில் Jayalalitha answer Villupuram district not ignored

எந்த காலகட்டத்திலும் விழுப்புரம் மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை: சட்டசபையில் ஜெயலலிதா பதில் Jayalalitha answer Villupuram district not ignored

சென்னை, அக். 28–

சட்டசபையில் தே.மு.தி.க. உறுப்பினர் வெங்கடேசன் துணை நிதி நிலை அறிக்கை மீது பேசும்போது விழுப்புரம் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

அப்போது முதல்–அமைச்சர் ஜெயலிலதா குறுக்கிட்டு கூறியதாவது:–

தானே புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விழுப்புரம், கடலூர் ஆகும். இந்த 2 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான கோடி செலவில் நிவாரணத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினோம்.

வீடு இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடு கட்டும் திட்டத்தையும் அறிவித்தேன். எனவே எந்த கால கட்டத்திலும் விழுப்புரம் மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை. புறக்கணிக்கப்படுவதாக கூறும் கூற்று சரியில்லை.

உறுப்பினரின் கேள்விகளுக்கு விவரங்கள் கேட்டு இருக்கிறேன். பதில் வந்ததும் புள்ளி விவரங்களுடன் விளக்கம் தருவேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

...

shared via

Saturday, October 26, 2013

சரத்குமாரின் தாயார் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல் Sarath Kumar mother died Chief Minister Jayalalitha condoled

சரத்குமாரின் தாயார் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல் Sarath Kumar mother died Chief Minister Jayalalitha condoled

சென்னை, அக். 26-

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா இன்று உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

இதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா, சரத்குமாருக்கு அனுப்பிய இரங்கல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"தங்களின் அன்புத் தாயார் புஷ்பலீலா இன்று (26.10.2013)  உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், தாயார் புஷ்பலீலாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அவரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

...

shared via

Friday, October 25, 2013

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி புதிய காவல் சட்ட மசோதா: சட்டசபையில் ஜெயலலிதா தாக்கல் supreme court judgement New police legislation assembly jayalalitha submit

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி புதிய காவல் சட்ட மசோதா: சட்டசபையில் ஜெயலலிதா தாக்கல் supreme court judgement New police legislation assembly jayalalitha submit

சென்னை, அக். 25–

சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 2013–ம் ஆண்டு தமிழ்நாடு காவல் (சீர்திருத்தம்) சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:–

உச்சநீதிமன்றம் 2006–ம் ஆண்டு பிரகாஷ்சிங் வழக்கில் கூறிய தீர்ப்பில் ஒவ்வொரு மாநிலமும் கட்டாயமாக ஒரு புதிய காவல் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறி உள்ளது.

மேலும் புதிய சட்டம் இயற்றப்படும் வரை பின் வரும் பிரச்சினைகளின் பேரில் மாநில அரசுக்கு பணிப்புரைகளையும் வழங்கி உள்ளது.

1. மாநில பாதுகாப்பு ஆணையம்.

2. காவல் தலைமை இயக்குனரின் தேர்வு மற்றும் குறைந்தபட்ச காலம்.

3. காவல் தலைவரின் மற்றும் பிற அலுவலர்களின் குறைந்தபட்ச காலம்.

4. புலனாய்வை பிரித்தல்.

5. காவல் பணியாளர் வாரியம்.

6. காவல் புகார்கள் அதிகார அமைப்பு.

உச்சநீதிமன்றம் கூறியதன் வகையில் அரசு காவல் சீர்திருத்தம் தொடர்பாக சட்டத்தை இயற்ற முடிவு செய்து உள்ளது.

அதன்படி 2013–ம் ஆண்டு தமிழ்நாடு காவல் சீர்திருத்த அவசர சட்டம் செப்டம்பர் 10–ந்தேதி ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் 11–ந்தேதியிட்ட தமிழ்நாடு சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

...

shared via

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced tamilnadu end of the year in excess of the State and becomes

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced tamilnadu end of the year in excess of the State and becomes

சென்னை, அக். 25–

சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் சிறு, குறு தொழில்களுக்கும், விவ சாயிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க கோரும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்கள்.

இதற்கு பதிலளித்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

தற்போது பேசிய உறுப்பினர்கள் பாலபாரதி, ஆறுமுகம் ஆகியோர் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு நிலைமை பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். இதனால், சிறு, குறு தொழில்கள் நடத்துபவர்கள் பாதிக்கப்படுவதாக தற்போது குறிப்பிட்டார்கள். இன்றைய நிலைமையில் மின்வெட்டு குறித்து கவலைப்படக்கூடிய எந்தச் சூழ்நிலையும் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இயற்கை நமக்கு பல சக்திகளை வாரி வழங்கி இருந்தாலும், அவற்றில் மிகப் பெரிய அளவில் மக்களுக்கு பயன்படுவதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாகவும் விளங்குவது மின் சக்தி என்று சொன்னால் அது மிகையாகாது. கண்ணால் பார்க்க முடியாத மின்சாரத்தை அதன் செயல்பாடுகளில் இருந்து உணருவது போல், மின் உற்பத்தியைப் பெருக்க, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்க நான் எடுத்து வரும் துரித நடவடிக்கைகளை கண்ணால் காண முடியாவிட்டாலும், தற்போதைய சீரான மின் விநியோகத்தின் மூலம் தமிழக மக்கள் எளிதில் உணர்ந்து இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாகத் திறமையின்மை காரணமாக, ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூழ்கியது.

நான் 2011 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, தமிழகத்தின் மின் பற்றாக்குறை 4,000 மெகாவாட் அளவுக்கு இருந்தது. இதற்குக் காரணம், ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே வரும் மின் தேவைக்கு ஏற்ப புதிய மின் திட்டங்களை உரிய காலத்தில் தீட்டாதது, ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட திட்டங்களை சரிவர நிறைவேற்றாதது, மின் விநியோக கட்டமைப்புகளை மேம்படுத்தாதது, நீண்டகால அடிப்படையில் பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யாதது என பல குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்த போது, 1,302 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 561 மெகாவாட் மின் நிறுவு திறன் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.

பின்னர், 2001 முதல் 2006 வரை நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த போது, 2,518 மெகாவாட் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக மத்திய அரசின் விருதுகள் நமக்கு கிடைத்தன. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது. மொத்தத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக விளங்கியது. ஆனால், 2006 முதல் 2011 வரையிலான முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் வெறும் 206 மெகாவாட் அளவுக்கே கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது.

2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்த போதும், மைனாரிட்டி தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு வரை மின் பற்றாக்குறை இல்லாத நிலைமை நிலவியது. இந்தியாவிலேயே மின்சார உற்பத்தியில் உபரி மாநிலமாக இருப்பது தமிழ்நாடு மட்டும் தான் என்று அப்போதைய மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே 3.4.2007 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசி இருப்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த நிலைமை சிறிது காலம் தான் நீடித்தது. 2007 ஆம் ஆண்டு இறுதியிலிருந்தே நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்து, 2008 ஆம் ஆண்டிலிருந்து மின் பற்றாக்குறை தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆட ஆரம்பித்தது.

இந்த அளவுக்கு நிலைமை மோசமானதற்கு அனல் மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாதது, மின் உற்பத்தித் திட்டங்களை விரைவுபடுத்தாதது, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்குரிய மின்சாரத்தை பெற முடியாதது என பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், நீண்ட கால அடிப்படையில், அதாவது கேஸ்–1 என்கிற அடிப்படையில் மின்சாரத்தை கொள்முதல் செய்திருந்தாலே இந்த மின் பற்றாக்குறையை சமாளித்து இருக்கலாம். இதை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு செய்திருந்தால், நமக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைத்திருக்கும். ஆனால், இதை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு செய்யவில்லை.

மாறாக, அதிக விலை கொடுத்து குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில், மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வழித் தடத்தில் நெருக்கடி ஏற்பட்டதால், நீண்டகால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்களை செய்து கொண்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன் விளைவாக, விலை கொடுத்தாலும் மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

நான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். மின் பற்றாக்குறையை நீக்க எனது தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நான் இந்த மாமன்றத்தில் பல முறை விரிவாக எடுத்துரைத்து இருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை போக்கப்படும் என்றும் நான் தெரிவித்து இருந்தேன்.

600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப் பணிகளைப் பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலமான ஐந்து ஆண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தத் திட்டத்தினை விரைவுபடுத்தியதன் காரணமாக, தற்போது இந்தத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, இதிலிருந்து தற்போது நமக்கு தொடர்ந்து 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

வட சென்னை அனல் மின் நிலையத் திட்டத்தின் நிலை 2–ன் முதல் அலகை எடுத்துக் கொண்டால், 50 விழுக்காட்டிற்கும் குறைவான பணிகளே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, இந்தத் திட்டத்தின் பணிகள் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக, தற்போது இந்தத் திட்டத்திலிருந்து நமக்கு 300 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் 600 மெகாவாட் மின்சாரம் இதிலிருந்து நமக்கு கிடைக்கும்.

600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 2–ன் இரண்டாவது அலகுப் பணிகள் 40 விழுக்காடு மட்டுமே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முடிக்கப்பட்டு இருந்தன. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீதமுள்ள 60 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து 350 முதல் 450 மெகாவாட் மின் உற்பத்தி நமக்கு கிடைக்கிறது. நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்தத் திட்டத்தின் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தேசிய அனல் மின் கழகத்துடன் கூட்டு முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட வட சென்னை வல்லூரில் அமைந்துள்ள, 3X500 மெகாவாட் திறன் கொண்ட திட்டப்பணிகள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தன. இந்தப் பணிகளை நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு துரிதப்படுத்தியதன் காரணமாக, தற்போது இரண்டு அலகுகள் வணிக ரீதியாக மின் உற்பத்தியை முறையே 29.11.2012 அன்றும், 25.08.2013 அன்றும் துவங்கியுள்ளன. மூன்றாவது அலகு அடுத்த ஆண்டு மே மாதம் முதல் உற்பத்தியைத் தொடங்கும்.

மேற்கண்ட புதிய அனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால் தற்போது கூடுதலாக 1700 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்து வரும் 2X500 மெகாவாட் அனல் மின் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக வ.உ.சி. துறைமுகத்திடமிருந்து பெறப்பட்டுள்ள நிலம் 'காடுகள்' என வருவாய்த் துறை ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளதால் அதனை மறுவகைப்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது இதற்கு என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ளவேண்டும். நியாயமாக, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு மின்சாரத் திட்டத்திற்கு நிலத்தை வகைப்படுத்திக் கொடுங்கள், அனுமதி கொடுங்கள் என்று மத்திய அரசைக் கேட்டால், தற்போது காங்கிரஸ் தலைமையில் செயல்படும் மத்திய அரசு, அனுமதியைத் தரவில்லை. அதனால்தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்துள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் வரும் ஆண்டு மே மாதம் முதல் மின் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர மத்திய கால அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பெறப்பட்டு வருகின்றது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நீண்டகால அடிப்படையில் 15 ஆண்டுகள் பெறத்தக்க வகையில் 1000 மெகாவாட்+20சதவீதம் பெற வேண்டி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் மொத்தம் 3430 மெகாவாட் அளவிற்கு ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன. இதில் 1208 மெகாவாட் பெறுவதற்குரிய ஒப்பந்தங்கள்

4 உற்பத்தியாளர்களுடன் ஆகஸ்டு மாதத்தில் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த ஒப்பந்த புள்ளியிலிருந்தே கூடுதலாக 2122 மெகா வாட் மின்சாரம் பெற அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அரசு எடுத்த இந்த சீரிய முயற்சியால் மொத்தம்

3330 மெகாவாட் மின்சாரம் 15 ஆண்டுகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெருமளவு மின்சாரம் சட்டீஸ்கர், ஒடிசா மாநிலங்களிலிருந்து பெறப்படும்.

பிற மாநிலங்களிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தை எடுத்து வரத் தக்க மின் வழித் தடங்கள் இல்லாதது குறித்து நான் இந்த அவையிலே பல முறை பேசியிருக்கிறேன். இதனையடுத்து, தற்போது மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரிலிருந்து கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் வரை 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின் வழித்தடங்கள், அமைக்கப்பட்டு வருகின்றன. இது வரும் 2014 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் வழித் தடமும் இதனைச் சார்ந்த துணை மின் வழித் தடங்களும் இயக்கி வைக்கப்படும் போது, நாம் கொள்முதல் செய்துள்ள மின்சாரத்தை முழுமையாகப் பெற முடியும்.

இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை சிறப்பாக பெய்த காரணத்தால் நீர்மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த் தேக்கங்கள் ஏறத்தாழ முழு கொள்ளளவு நிலையை எட்டியுள்ளன. வருகின்ற வட கிழக்கு பருவ மழையும் நன்றாகவே அமையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காரணங்களாலும் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் 180 மில்லியன் யூனிட்டுகளாக இருந்து வந்த தினசரி மின் வினியோகம், இந்த ஆண்டு அதிகபட்சமாக 270 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் நாள் அன்று இதுவரை இல்லாத உச்ச தேவையான 12,118 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைவு செய்தது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 15.6.2013 முதல் தினசரி 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நிகழும் மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்ததற்கு ஏற்ப, 1.10.2013 முதல் உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்வெட்டு, உச்சத் தேவையான மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையுள்ள நேரம் நீங்கலாக, இதர நேரங்களில் 40 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான மின்வெட்டு சென்னையில் இரண்டு மணி நேரம் என்றும், இதர பகுதிகளில் மூன்று மணி நேரம் என்றும் இருந்தாலும், பெரும்பாலான நாட்களில் மின்வெட்டே இல்லை என்பது தான் யதார்த்த நிலை. அதாவது, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றிருந்த நிலை மாறி, தற்போது அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் நடைமுறைப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு இதுதான். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள். மின்வெட்டு என்று அறிவிக்கவே இல்லை. ஆனால் மின்வெட்டு இருந்தது. அது நாளாக ஆக, அதிகரித்துக் கொண்டே போனதால் மறைக்க முடியவில்லை. எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. எங்களைப் பொறுத்த வரையில், மோசமான நிலையை சீர்செய்து இருக்கிறோம். இப்போது ஒரு எச்சரிக்கை உணர்வுடன், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுத்துவிட்டு தவறிவிடக்கூடாது என்பதற்காக, மின்வெட்டு இருக்கும் என்று சொல்கிறோம். ஆனால் மின்வெட்டே இல்லாமல் மின்சாரத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

நான் ஏற்கெனவே அறிவித்ததற்கேற்ப, தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் முழுமையாக நீங்கி, தங்கு தடையின்றி அனைத்து தரப்பு நுகர்வோர்களுக்கும் மின்சாரம் கிடைக்கப் பெறும்.

தமிழகத்தின் எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு, பல்வேறு புதிய மின் திட்டங்களை நான் இந்த மாமன்றத்தில் அறிவித்து இருந்தேன். அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்த மாமன்றத்திலே நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்க அலகிற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு ஆய்வுகள் இறுதி நிலையில் உள்ளன. விரைவில் இத்திட்டம் அமைப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் துவங்கும்.

2X660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் 8000 கோடி ரூபாயில் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு ஆய்வில் உள்ளன. இதற்கான ஆணைகளும் விரைவில் வழங்கப்படும்.

இதே போன்று 2X660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்டமும், நிலக்கரி இறக்கு தளத்துடன் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. இவையும் விரைவில் இறுதி செய்யப்பட்டு, ஆணைகள் வழங்கி, பணிகள் துவக்க ஆவன செய்யப்படும்.

மேலும் 2X800 மெகாவாட் திறன் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் புதிய அனல் மின் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்ற சட்டமன்றத் தொடரில் நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2000 மெகாவாட் திறன் கொண்ட 'சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம்' உருவாக்கப்படும் என நான் அறிவித்து இருந்தேன். இதற்கான ஆய்வுப் பணிகள் 22.8.2013 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இது மட்டுமல்லாமல், உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தைக் கொண்டு சென்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கத் தக்க வகையில் பல புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித் தடங்கள் அமைக்கப்படும் என்றும் நான் அறிவித்திருந்தேன்.

5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3572 கோடி ரூபாய் ஜப்பானிய நிதியுதவியுடன் தமிழ்நாட்டின் குறிப்பாக சென்னையின் கட்டமைப்பையும், தொடரமைப்பையும் வலுப்படுத்த ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஐந்து 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும், பதினான்கு 230 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்களும் அவற்றைச் சார்ந்த மின் தட வழிகளும் அமைக்கப்பட வேண்டும். இவற்றில் ஐந்து 230 கிலோ வோல்ட் துணைமின் நிலையங்களுக்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டன. இரண்டு 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கும், ஏழு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்குமான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கும், இரண்டு 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவுள்ளன.

இதே போன்று, 8000 கோடி ரூபாய் செலவில் 56 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என நான் அறிவித்திருந்தேன். இவற்றுள் 5 துணை மின் நிலையங்கள் சோதனை மின்னோட்டம் செய்யப்பட்டுள்ளன. 24 துணை மின் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 7 துணை மின் நிலையங்களில் பணிகள் துவங்கப்பட உள்ளன. 13 துணை மின் நிலையங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வில் உள்ளன.

7 துணை மின் நிலையங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவுள்ளன.

மேலும் பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறத்தக்க வகையில் வேலூர் மாவட்டம் திருவலத்தில் 400 கிலோ வோல்ட் துணைமின் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் அதனைச் சார்ந்த 400 கிலோ வோல்ட் மின் வழித் தடங்களுக்குமான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன.

மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களை மையமாகக் கொண்டு மின்னுற்பத்தியை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் 'சூரிய எரிசக்தி கொள்கை 2012'ஐ நான் வெளியிட்டிருந்தேன். இதன்படி மூன்று ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்பட வேண்டும். இதனடிப்படையில் முதல் கட்டமாக 1000 மெகாவாட் அளவிற்கான சூரிய சக்தி மின்னுற்பத்தித் திட்டங்களை நிறுவி அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 698 மெகாவாட் அளவிற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்"" என்ற பழமொழிக்கேற்ப, நமக்கெல்லாம் மின் உற்பத்தியை, மின் விநியோகத்தை அளித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதி நிலைமையைச் சீர்படுத்துவதற்காக எனது தலைமையிலான அரசு பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

31.3.2011 நிலவரப்படி தமிழ்நாடு மின்வாரியத்தின் மொத்த இழப்பு சுமார் 40,375 கோடி ரூபாயாகும். இந்த இழப்பை ஈடு செய்து தமிழ்நாடு மின்வாரியத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் வகையில் நிதி சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி, தமிழ்நாடு மின் வாரியத்தின் குறுகிய கால கடன் சுமையில் 50 சதவீதத்தை அரசே ஏற்றுக் கொள்ளும்.

இந்த சீரமைப்புத் திட்டத்தின்படி 6353.49 கோடி ரூபாய்க்கான மின் வாரியத்தின் நிலுவைக் கடன் தொகைக்கு ஈடான நிதிப் பத்திரங்கள் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதன் மீதான அசல் மற்றும் வட்டியினை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் 5,951.43 கோடி ரூபாய் வங்கிக் கடனை மறு சீரமைப்பு செய்வதற்காக அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது. இது தவிர, தமிழ்நாடு மின் வாரியம் கடன் பெற ஏதுவாக 22,700 கோடி ரூபாய் அளவிற்கு அரசு உத்தரவாதத்தை அளித்துள்ளது.

எனது தலைமையிலான தமிழக அரசு கடந்த 2011–2012 ஆம் ஆண்டில் 7,913.35 கோடி ரூபாயும், 2012–2013 ஆம் ஆண்டில் 11,242 கோடி ரூபாயும் நிதியுதவியாக வழங்கியுள்ளது. 20132014 ஆம் ஆண்டிற்கு இதுவரை இருந்திராத அளவாக 12,197 கோடி ரூபாயை நிதியுதவியாக தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மானியத் தொகை 4,749.90 கோடி ரூபாயை அரசு முன்னதாகவே வழங்கியுள்ளது. மேலும் பங்கு மூலதனமாக 500 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்சாரத் துறையையே பாழ்படுத்தி, சீர்குலைத்து, அது திவாலாகும் அளவிற்கு, இழுத்து மூடவேண்டிய அளவிற்கு ஆக்கிவிட்டு, 45,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடனையும் வைத்து விட்டுச் சென்றார்கள். இப்பொழுதுதான் நான் அந்தத் தொகையை சொன்னேன். 40,375 கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டுச் சென்றார்கள். நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, இருந்த நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கடனை எப்படி திருப்பி செலுத்த முடியும்? தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலைமையை எப்படி மீண்டும் சீர்படுத்த முடியும்? என்று மலைத்துவிட்டார்கள், திகைத்துவிட்டார்கள். நானும் மிகவும் கவலை கொண்டேன். அன்றைய நிலைமையில் ரிசர்வ் வங்கி, ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு போட்டுவிட்டது, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் கொடுக்கக்கூடாது என்று. அவர்கள் முடிவே கட்டிவிட்டார்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியம் இனி தேறவே தேறாது என்று சொல்லி கடன்கூட கொடுக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார்கள். ஆனால், அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இன்றைக்கு படிப்படியாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு கிட்டத்தட்ட அந்தக் கடன் முழுவதையும் அடைக்கும் அளவிற்கு, தமிழக அரசே பொறுப்பேற்றுக்கொண்டு, அந்தப் பணத்தை மின்சார வாரியத்திற்கு வழங்கி, இன்று மின்சார வாரியத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கிறோம். ஆகவே, மாண்புமிகு உறுப்பினர்கள் எந்தவகையிலும் கவலைகொள்ளத் தேவையில்லை. வெகு விரைவில், மிக விரைவில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக ஆக்கப்படும் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதை சாதித்தே தீருவோம். இதையே கடந்த ஆண்டு சாதித்தே தீருவோம் என்று நான் பேசியபோது, எப்படி செய்யப் போகிறார்கள் என்று எல்லோரும் நகைத்தார்கள். இப்போது சாதித்தே தீருவோம் என்றால் எல்லோரும் நம்புகிறார்கள் என்றால் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் சாதித்து விட்டோம். இன்னும் ஒரு சதவிகிதம்தான். இந்த ஆண்டு இறுதிக்குள் அதையும் சாதித்துவிடுவோம். ஆகவே நான் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் நமக்குத் தேவையான மின்சாரம் விரைந்து கிடைக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை மேம்படவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, உறுப்பினர்கள் பாலபாரதி, ஆறுமுகம் அவர்களும், மற்ற உறுப்பினர்களும் சிறு, குறு தொழிலாளர்களின் நிலைமை என்னவாகும், சிறு, குறு தொழில்கள் நடத்துவோரின் நிலைமை என்னவாகும் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. எல்லோருக்கும் 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும்படியான ஒரு சூழ்நிலையை வெகு விரைவில் உருவாக்கிக் காட்டுவோம் என்று தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

உறுப்பினர் பாலபாரதி பேசும்போது, சிறு, குறு தொழில்களுக்கு மின்வெட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், சிறு, குறு தொழில்களுக்கு மின்வெட்டு கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர் மின் அழுத்த பெரிய தொழிற்சாலைகளுக்கு இருந்த 40 விழுக்காடு மின்வெட்டும் 1.10.2013லிருந்து 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர் ஆறுமுகம் பேசும்போது, விவசாயத்திற்கு அளிக்கப்படும் மின்சாரம் குறித்து குறிப்பிட்டார். டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேர மும்முனை மின்சாரம் அளிக்கப்படுவதுடன், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சராசரியாக 9 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

...

shared via

ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced Yercaud election ADMK team

ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced Yercaud election ADMK team

சென்னை, அக். 25–

ஏற்காடு தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு 4.12.2013 அன்று நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,

1. மதுசூதனன்–அவைத் தலைவர்.

2. ஓ. பன்னீர்செல்வம் – பொருளாளர் நிதித்துறை அமைச்சர்.

3. நத்தம் இரா. விசுவநாதன் – திண்டுக்கல் மாவட்ட செயலாளர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர்.

4. கே.பி. முனுசாமி – கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர்.

5. ஆர்.வைத்திலிங்கம் – தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்.

6. ப.மோகன் – விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர், ஊரகத் தொழில் துறை அமைச்சர்.

7. பா. வளர்மதி – இலக்கிய அணிச் செயலாளர், சமூக நலத்துறை அமைச்சர்.

8. பழனியப்பன் – தலைமை நிலையச் செயலாளர், உயர்கல்வி, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்.

9. தாமோதரன் – கோவை புறநகர் மாவட்ட செயலாளர், வேளாண்மைத் துறை அமைச்சர்.

10. செல்லூர் கே.ராஜு – மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், கூட்டுறவுத் துறை அமைச்சர்.

11. கே.டி.பச்சைமால் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.

12. எடப்பாடி கே.பழனிசாமி – சேலம் புறநகர் மாவட்ட செயலாளர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்.

13. ஆர்.காமராஜ் – திருவாரூர் மாவட்ட செயலாளர், உணவுத் துறை அமைச்சர்.

14. வி.மூர்த்தி – திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர், பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்.

15. எம்.சி.சம்பத் – கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.

16. கே.வி.ராமலிங்கம் – ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர், பொதுப்பணித் துறை அமைச்சர்.

17. சின்னையா – காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.

18. தங்கமணி – நாமக்கல் மாவட்ட செயலாளர், தொழில் துறை அமைச்சர்

19. டாக்டர் எஸ். சுந்தரராஜ் – கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்.

20. செந்தூர்பாண்டியன் – இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்.

21. ரமணா – திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்.

22. சண்முகநாதன் – தூத்துக்குடி மாவட்ட செயலாளர், சுற்றுலாத் துறை அமைச்சர்.

23. சுப்பிரமணியன் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.

24. செந்தில்பாலாஜி – கரூர் மாவட்ட செயலாளர், போக்குவரத்துத் துறை அமைச்சர்.

25. ஜெயபால் – நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர், மீன்வளத்துறை அமைச்சர்.

26. முக்கூர் என்.சுப்பிரமணியன் – திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

27. ராஜேந்திர பாலாஜி – விருதுநகர் மாவட்ட செயலாளர், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்.

28. ஆனந்தன் – திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வனத்துறை அமைச்சர்.

29. தோப்பு வெங்கடாச்சலம் – ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர், வருவாய்த் துறை அமைச்சர்.

30. பூனாட்சி – கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்.

31. கே.சி. வீரமணி – வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

32. அப்துல் ரஹீம் – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்.

33. பொன்னையன் – கழக அமைப்புச் செயலாளர்.

34. பி.எச்.பாண்டியன்– கழக அமைப்புச் செயலாளர்.

35. தமிழ்மகன் உசேன் – அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு வக்பு வாரியம்.

36. தம்பிதுரை, எம்.பி., – கொள்கை பரப்புச் செயலாளர்.

37. பொள்ளாச்சி ஏ.ஜெயராமன் – தேர்தல் பிரிவுச் செயலாளர், சட்ட மன்றப் பேரவை துணைத் தலைவர்.

38. செம்மலை, எம்.பி., – அமைப்புச் செயலாளர்.

39. தங்கமுத்து – விவசாயப் பிரிவுச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்.

40. அன்பழகன் – ஜெயலலிதா பேரவைச் செயலாளர்.

41. சின்னசாமி, எம்.எல்.ஏ., – அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர்.

42. அன்வர்ராஜா – சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்.

43. உதயகுமார், எம்.எல்.ஏ., – எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்.

44. கோகுல இந்திரா, எம்.எல்.ஏ., – அமைப்புச் செயலாளர்.

45. செல்வராஜ் – அமைப்புச் செயலாளர்.

46. வேணுகோபால், எம்.பி., – மருத்துவ அணிச் செயலாளர்.

47. மனோஜ் பாண்டியன், எம்.பி., – வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்.

48. கலைமணி–மீனவர் பிரிவுச் செயலாளர்.

49. கமலகண்ணன் – அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்.

50. சசிகலா புஷ்பா – மகளிர் அணிச் செயலாளர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர்.

51. குமார், எம்.பி.,– இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர்.

52. விஜயகுமார் – மாணவர் அணிச் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

...

shared via

Thursday, October 24, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் India should not take part in the Commonwealth Conference Assembly jayalalitha resolution

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது: சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் India should not take part in the Commonwealth Conference Assembly jayalalitha resolution

சென்னை, அக். 24–

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அரசின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:–

2009–ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர் களை கொன்று குவித்து ஒரு இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.

இலங்கை அரசின் இந்த இனப் படுகொலையை ஈவு இரக்கமற்ற இழி செயலை மனிதாபிமானமற்ற தன்மையை, மனிதநேயமற்ற நடவடிக்கையையும், இலங்கை தமிழர்களை அழிக்க இந்திய அரசு ஆயுதங்கள் வழங்கியது மற்றும் பயிற்சிகள் அளித்த நடவடிக்கையையும் நான் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்திருக்கிறேன்.

இலங்கை அரசின், அராஜகச் செயலைக் கண்டித்து தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், மாணவமாணவி யர், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், கலைத் துறையினர் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் உணர்வுகளை வெளிப் படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இலங்கை நாட்டிற்கு எதிராக உலகம் முழுவதிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு தனது ஆய்வில், பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது; மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது; மனிதா பிமான முறையில், செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது; உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடிய வர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது உள்பட பல்வேறு கடுமையான குற்றங்களை இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தது.

இந்தச் சூழ்நிலையில் 2011 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்–அமைச்சராக பொறுப்பேற்ற நான், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது ஈவு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை 8.6.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்தேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானத்தின் மீது இது நாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கவும், சிங்களர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளவும், மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இலங்கை ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று நான் பாரதப் பிரதமருக்கு கடிதங்கள் எழுதினேன்.

இதன் விளைவாக, தமிழ்நாட்டில் இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சி பெறுவது ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்குத் தேவையான மறுவாழ்வு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்றும், தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவது தொடர்கிறது என்றும் தகவல்கள் வரப் பெற்றன.

இது மட்டுமல்லாமல் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து புதிய ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டன. இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் நாடே கொதித்தது.

இதனைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடை பெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்து 25.3.2013 அன்றே கடிதம் வாயிலாக, பாரதப் பிரதமரை நான் கேட்டுக் கொண்டேன்.

இது மட்டுமல்லாமல் 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இலங்கை நாட்டை "நட்பு நாடு" என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்ப டையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு "தனி ஈழம்" குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் அரசினர் தீர்மானத்தினை நான் முன்மொழிந்தேன்.

அது இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மீதும் மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், தமிழக மக்களின் உணர்வுகள் உட்பட, அனைத்து காரணிகளையும் பரிசீலித்து, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்வது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், பாரதப் பிரதமர் தன்னுடைய பங்கேற்பு பற்றி மட்டும் கருத்து தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் தலைவரான இரண்டாம் ராணி எலிசபெத் அவர்களால் காமன்வெல்த் நாளான 11.3.2013 அன்று கையெழுத்திடப்பட்ட காமன்வெல்த் சாசனத்தில், மனித உரிமைகள் என்ற தலைப்பின் கீழ், மனித உரிமைகள் குறித்த பொதுவான பிரகடனம், இதர தொடர்புடைய மனித உரிமைகள் குறித்த உடன் பாடுகள் மற்றும் இதர சர்வதேச ஆவணங்கள் ஆகியவற்றை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அமைதி, நியாயம் மற்றும் நிலையான சமூகங்கள் ஆகியவற்றின் அடிப்படையாக விளங்கும் வளர்ச்சி உரிமை உள்பட சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார சம உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வழிவகுக்கும் சம உரிமை மற்றும், கண்ணியத்தை எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் வழங்கவும் உறுதி பூணுகிறோம் என்றும், இந்த உரிமைகள் அனைத்தும் பொதுவானவை, பிரிக்க முடியாதவை, ஒன்றுக் கொன்று சார்புடையவை, ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், இதில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்து செயல்படுத்த முடியாது என்றும், காமன்வெல்த் சானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலினம், இனம், நிறம், மதம், அரசியல் நம்பிக்கை, அல்லது வேறு காரணங்களுக்காக ஏற்படுத்தப்படும் வேறுபாடுகளை கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணாக இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

காமன்வெல்த் நாடுகளின் முக்கியமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிலைநிறுத்த முன்வராத இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பு தொடர்ந்து உகந்த வகையில் திகழ வேண்டுமென்றால் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித கண்ணியத்தை மதித்தல் போன்ற அடிப்படைக் கொள்கைகளின் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்ட காமல் வெல்த் அமைப்பு அவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்று கனடா நம்புகிறது.

கனடா நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்படும் காமன்வெல்த் நாடுகளின் இந்த முக்கியக் கொள்கை களை நிலைநிறுத்த இலங்கை அரசு தவறிவிட்டதால், கனடா நாட்டு பிரதமர் என்ற முறையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார்.

அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்து பெயரளவில் ஒருவரை அனுப்பவுள்ள சூழ்நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்னும் தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்குக் கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் தெரிவித்து, இது போன்ற நடவடிக்கை இலங்கைத் தமிழர்கள் மீது நியாயமான அணுகு முறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும் என்றும் கோடிட்டுக்காட்டி ஒரு விரிவான கடிதத்தினை நான் பாரதப் பிரதமருக்கு 17.10.2013 அன்று எழுதியுள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதே கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றன. எனினும், மத்திய அரசு இந்தப் பிரச்சனை தொடர்பாக ஒரு திடமான, தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்க வில்லை.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளைத், தெரிவிக்கும் வகையிலும், கீழ்க்காணும் தீர்மானத்தினை நான் முன்மொழிகிறேன்.

"தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்; பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும்; இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்; இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்னும் தீர்மானத்தினை நான் முன்மொழிகிறேன்.

என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தினை ஒரு மனதாக நிறைவேற்றித் தருமாறு பேரவைத் தலைவர் வாயிலாக உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்பிறகு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவிக்கலாம் என்று சபாநாயகர் கூறினார்.

இதையடுத்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா எழுந்து நான் ஏற்கனவே இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முன்மொழிந்த போது அனைத்து கருத்துக்களையும் தெரிவித்து விட்டேன். எனவே இந்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன் என்றார்.

அதன் பின் தீர்மானத்தை சபாநாயகர் குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். இதில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

...

shared via

ஜெயலலிதா தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகள் ஆதரவு jayalalitha decision all party support

ஜெயலலிதா தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகள் ஆதரவு jayalalitha decision all party support

சென்னை, அக். 24–

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்ட சபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த அரசினர் தீர்மானத்தை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து வரவேற்று பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:–

சபாநாயகர் தனபால்:– உலக தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் படும் துன்பத்தை தனது துன்பமாக கருதுபவர் முதல்–அமைச்சர் அம்மா அவர் கொண்டு வந்த இந்த தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்கது. தமிழர் இனம் உயர அல்லும், பகலும் அவர் அயராது பாடுபட்டு வருகிறார்.

இந்த தீர்மானத்தை கொண்டு வந்த முதல்– அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):– முதல்–அமைச்சரால் கொண்டு வரப்பட்ட அரசினர் தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வழிமொழிந்து வரவேற்க கடமைப்பட்டுள்ளேன்.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறப் போகிறது என்ற செய்தி வந்ததில் இருந்து அந்த மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்றும் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பலமுறை குரல் கொடுத்துள்ளார்.

25–3–13 அன்று நடந்த தி.மு.க. செயற்குழுவிலும், 16–7–13 அன்று நடந்த டெசோ கூட்டத்திலும் இது பற்றி விரிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு விரிவான கடிதமும் எழுதியுள்ளார்.

தி.மு.க. மட்டுமல்ல பல்வேறு கட்சிகளும் தமிழ் உணர்வு ஆர்வலர்களும் மட்டுமின்றி முதல்–அமைச்சரும் 17–10–13 அன்றும், 25–3–13 அன்றும் இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கனடா நாட்டின் அகில உலக தமிழர்களும் மாநாட்டை புறக்கணித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிபரே கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து எம்.பி.க்களும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழக அளவில் அனைவருமே இதில் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. இதற்கு பிறகும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கையுடனான உறவை இந்தியா கைவிடாமல் இருந்தால் காமன்வெல்த் நாடுகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ராஜபக்சே அவைத் தலைவராக வந்து விடும் நிலை ஏற்பட்டு விடும்.

எனவே ராஜபக்சே நீதி விசாரணைக்கு உட்படாமல் தப்பிக்கும் இக்கட்டான சூழ்நிலை உருவாகி விடும். இதை கருத்தில் கொண்டாவது இந்தியா காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து வலியுறுத்தும் இந்த கருத்துக்கு ஆதரவாக இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்லி முதல்– அமைச்சரின் தீர்மானத்தை வரவேற்கிறேன்.

பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.):– இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் போதே இந்த தீர்மானம் வரும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் சட்டமன்ற அலுவல்கள் தொடங்கிய முதல் நாளே இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது உலக தமிழர் மனதை பால்வார்த்தது போல் இருக்கிறது.

மத்திய அரசு இலங்கை குறித்து ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இலங்கையை கண்டு எந்த விதத்திலும் பயப்படக்கூடாது. இலங்கை தமிழர்களுக்கு அந்த நாட்டு அரசு எந்த உரிமையும் அளிக்கவில்லை. மனித உரிமை மீறல், இனப்படுகொலை, போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.

கோபிநாத் (காங்):– மத்திய அரசு இலங்கையில் வாழுகிற தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது. இலங்கை பிரச்சினையில் நாங்கள் ராஜீவ்காந்தியை இழந்து விட்டோம். அங்குள்ள தமிழ் மக்களுக்காக மத்திய அரசு இன்று வரை ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து வசதிகளை செய்து கொடுத்துள்ளது. நமது பணம் அங்கு சரியாக செல்வழிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழு அமைத்து மத்திய அரசு பார்வையிடுகிறது. இன்று தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவரான நானும் எங்களது உறுப்பினர்களும் ஆதரிக்கிறோம். வரவேற்கிறோம். எங்களுக்குள்ள ஆதங்கம் இலங்கையுடன் இந்தியாவின் உறவு முறிந்தால் அங்கு வாழும் தமிழர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போகுமோ என்ற பயம் உள்ளது.

இதே போல் பக்கத்து நாடுகளால் பாதுகாப்பு அச்சமும் உள்ளது என்பதையும் சொல்லி இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.

ஆறுமுகம் (இந்திய கம்யூ), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), பி.வி.கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோரும் தீர்மானத்தை வரவேற்று பேசினார்கள்.

...

shared via

Wednesday, October 23, 2013

ஜெயலலிதா முன்னிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்ரவால் பதவி ஏற்றார் High court chief judge Rajesh sworn

ஜெயலலிதா முன்னிலையில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அக்ரவால் பதவி ஏற்றார் High court chief judge Rajesh sworn

சென்னை, அக். 24–

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய எம்.ஒய்.இக்பால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதைத் தொடர்ந்து நீதிபதி தர்மாராவ் சென்னை ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்.

பின்னர் உத்தரபிரதேச மாநிலம் அகலாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பணிமூப்பு பெற்றதை தொடர்ந்து ராஜேஷ்குமார் அக்ரவாலை தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவால் பதவி பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று காலை கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடந்தது.

அப்போது தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்த உத்தரவை ஆங்கிலத்தில் வாசித்தார். அதன் பிறகு தலைமை நீதிபதியாக ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு கவர்னர் ரோசய்யாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் கவர்னர் ரோசய்யாவும், தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவாலும் பதவி ஏற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டனர். இதன் பிறகு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவாலுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

அதையடுத்து ஐகோர்ட்டு நீதிபதிகள், அரசு வக்கீல்கள் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவருக்கும் தேனீர் விருந்து வழங்கப்பட்டது.

...

shared via

பொதுமக்கள் வசதிக்காக மேலும் ஒரு ‘அம்மா’ குடிநீர் உற்பத்தி நிலையம்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced public facility amma water

பொதுமக்கள் வசதிக்காக மேலும் ஒரு 'அம்மா' குடிநீர் உற்பத்தி நிலையம்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced public facility amma water

சென்னை, அக். 23–

போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை வழங்கியும், சிற்றுந்துகள் (ஸ்மால் பஸ்) மற்றும் புதிய பேருந்துகளைத் துவக்கி வைத்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை பலவகைப்படுத்தும் நோக்கிலும், "அம்மா குடிநீர் திட்டம் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் "அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்" 15.9.2013 அன்று என்னால் துவக்கி வைக்கப்பட்டது. இங்கு பெறப்படும் அதிக அளவு நீரினைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு "அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்" அமைக்கப்படும் என்பதையும் இதன் மூலம், நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

...

shared via

610 புதிய பஸ்கள்–50 சிறிய பஸ்கள் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் 610 new bus 50 small bus jayalalitha inaugurated

610 புதிய பஸ்கள்–50 சிறிய பஸ்கள் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் 610 new bus 50 small bus jayalalitha inaugurated

சென்னை, அக். 23–

தமிழ்நாடு முழுவதும் 610 புதிய பஸ்கள், சென்னை நகரில் 50 சிறிய பஸ்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 61,746 பேருக்கு ரூ.257 கோடி பணப்பயன் வழங்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை நடந்தது.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பயன்களையும் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:–

மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து வாகனங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இதில் சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

சாலைப் போக்குவரத்துச் சேவையை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கும் பணியை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிதாக 610 பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் 50 புதிய சிற்றுந்துகள், அதாவது ''ஸ்மால் பஸ்'' ஆகியவற்றை இன்று துவக்கி வைப்பதிலும், 257 கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதியப் பயன்களை ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு வழங்குவதிலும், நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிலைமை அதல பாதாளத்தில் இருந்தது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு 6,150 கோடியே 95 லட்சம் ரூபாய் ஆகும்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் நிதி நிர்வாக சீர்கேட்டினால் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன.

போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட அளிக்க முடியாத நிலைமை இருந்தது. பல பேருந்துகள் இயக்க இயலாத நிலையில் இருந்தன. மொத்தத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன.

இவை அனைத்திற்கும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையே முக்கிய காரணம்.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்துக் கழகங்களை திறம்பட செயல்படுத்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி உதவி அளித்தல், புதிய பேருந்துகளை வாங்குதல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தேன். தகுதியற்ற பேருந்துகளுக்கு மாற்றாக புதிதாக 1,026 கோடி ரூபாய் செலவில் 6000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் 3,051 பேருந்துகள் வாங்கப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல், அடிச்சட்டம் மற்றும் எஞ்சின் நல்ல நிலையில் உள்ள 483 பேருந்துகள் 34 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் பராமரிப்பிற்காக புதிதாக 68 பணிமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொலைதூர தடங்களுக்கு மின்னணுப் பயணச் சீட்டு முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

16,661 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில் நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் 346 வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

9,157 பதிலி பணியாளர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் விளம்பரம் செய்வதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 28 கோடியே 13 லட்சம் ரூபாய் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

இதே போன்று அஞ்சல் சேவைகளை அறிமுகப்படுத்தியதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 44 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது தவிர பயண வழி உணவகங்கள் மூலமாக 4 கோடியே 67 லட்சம் ரூபாய் வருமானத்தை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஈட்டியுள்ளன.

அதே சமயத்தில் டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் இருக்கும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த ஆண்டு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டிலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பர் 2010 முதல் மார்ச் 2011 வரை ஓய்வு பெற்ற, 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக 47 கோடியே 71 லட்சம் ரூபாயும் ஏப்ரல் 2011 முதல் செப்டம்பர் 2011 வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற 2,337 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக 52 கோடியே 48 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4,653 ஓய்வூதியதாரர்களுக்கு 100 கோடியே 19 லட்சம் ரூபாய்க்கான ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்காமல் விட்டுச் சென்ற 30 கோடியே 33 லட்சம் ரூபாய் பணிக்கொடை மற்றும் 14 கோடியே 45 லட்சம் ரூபாய் விடுப்பு ஒப்படைப்பு தொகை என மொத்தம் 44 கோடியே 78 லட்சம் ரூபாயையும் சேர்த்து இதுவரை, 153 கோடியே 47 லட்சம் ரூபாய் பணிக்கொடை 32 கோடியே 38 லட்சம் ரூபாய் விடுப்பு ஒப்படைப்பு தொகை என மொத்தம் 185 கோடியே 85 லட்சம் ரூபாய் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று 2011 அக்டோபர் முதல் 2013 செப்டம்பர் வரை ஓய்வு பெற்ற 9,189 தொழிலாளர்களுக்கு 187 கோடியே 23 லட்சம் ரூபாய் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை, 47,649 ஓய்வூதியதாரர்களுக்கு 45 கோடியே 77 லட்சம் ரூபாய் அகவிலைப்படி, 4,908 ஓய்வூதியதாரர்களுக்கு 24 கோடி ரூபாய் ஓய்வூதியத் தொகை என மொத்தம், 257 கோடி ரூபாய் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று வழங்கப்பட இருக்கிறது. இவர்களில் 25 பேர்களுக்கு இந்த மேடையில் நான் வழங்க உள்ளேன். மற்றவர்களுக்கு அமைச்சர் பெருமக்கள் இன்றே வழங்குவார்கள்.

இதே போன்று பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 610 புதிய பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 50 சிற்றுந்துகள் ஆகியவற்றை நான் இங்கே துவக்கி வைக்க உள்ளேன்.

மக்கள் சேவையை மேலும் மேம்படுத்திடும் வகையிலும், ""செய்யும் தொழிலே தெய்வம்" என்பதற்கேற்ப உழைத்து ஓய்வு பெற்ற உங்கள் வாழ்வினை உயர்த்திடும் வகையிலும், இந்த விழா அமைந்துள்ளது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

...

shared via

உயிர் உள்ளவரை அம்மாவுக்கு விசுவாசமாக இருப்போம்: ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா பேட்டி yercaud constituency admk candidate Saroja interview

உயிர் உள்ளவரை அம்மாவுக்கு விசுவாசமாக இருப்போம்: ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா பேட்டி yercaud constituency admk candidate Saroja interview

ஆத்தூர், அக். 23–

ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மரணம் அடைந்த பெருமாள் மனைவி சரோஜா (55) அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் ஆத்தூர் அருகே உள்ள புழுதிகுட்டை கிராமம் ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். இவரது தந்தை வரதப்ப கவுண்டர். இவர் அங்கன் வாடி பள்ளி ஆசிரியராக பணியாற்றிய போது, தபால் காரராக வேலைப்பார்த்த பெருமாளை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

கடந்த 1980–ல் இருந்து அ.தி.மு.க. உறுப்பினராக உள்ளார். பாப்ப நாயக்கன் பாளையம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக கடந்த 1994–ம் ஆண்டு முதல் 1996–ம் ஆண்டு வரை இருந்தார்.

இவருக்கு ராஜேஷ் கண்ணா, சுரேஷ் கண்ணா, சதீஷ், கார்த்திக் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். இதில் ராஜேஷ் கண்ணா மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் துணை தலைவராக உள்ளார். மேலும் கருமந்துறை லேம்ப் கூட்டுறவு சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார்.

சுரேஷ்கண்ணா விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா, சதீஷ் தர்மபுரி மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக பணியாற்று வருகிறார். இவரது மனைவி நித்யா. கடைசி மகன் கார்த்தி என்ஜினீயரிங் படித்துள்ளார்.

இதுகுறித்து சரோஜா மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:–

எனது கணவர் இறந்த போது முதல்–அமைச்சர் நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உங்கள் குடும்பத்துக்கு நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறினார். அதன்படி தற்போது என்னை ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவித்து உள்ளார். உயிர்உள்ள வரைக்கும் அம்மாவுக்கு நாங்கள் விசுவாசமாக இருப்போம் என்றார்.

சரோஜாவின் கணவர் பெருமாள் ஏற்காடு தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முதன் முதலில் இவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

Tuesday, October 22, 2013

பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced 20 percent public sector employees Diwali bonus

பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு Jayalalitha announced 20 percent public sector employees Diwali bonus

சென்னை, அக்.22–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்து நேற்று சென்னை கோட்டையில் எனது தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மை செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்கு பிறகு, 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக்கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையும், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

மொத்தத்தில், பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

...

shared via

சென்னையில் 50 மினி பஸ்–610 புதிய பஸ்கள்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் 50 mini bus 610 new buses Jayalalitha launched

சென்னையில் 50 மினி பஸ்–610 புதிய பஸ்கள்: ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார் 50 mini bus 610 new buses Jayalalitha launched

சென்னை, அக். 22–

சென்னையில் பஸ் செல்ல முடியாத பகுதிகளில் மினி பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக 50 மினி பஸ்கள் விடப்படுகின்றன.

இதன் தொடக்க விழா நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இதில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று 50 மினி பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் 610 புதிய பஸ்களையும் தொடங்கி வைப்பதுடன், அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்கள் ரூ.257 கோடிக்கான காசோலையை வழங்குகிறார்.

விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பிரஜ்கிஷோர் பிரசாத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

...

shared via

Popular Posts